வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டார்க் மோட் வசதியை வாட்ஸ்அப் வழங்கியது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் டார்க் மோட் வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா செயலியில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. எனினும், பீட்டா பதிப்பில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.
வாட்ஸ்அப் வெப் சாட்பாக்ஸ், ஜிஃப் பேனல் என முழுமையாக டார்க் மோட் செயல்படுத்தப்பட்டு இருப்பது தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புதிய அம்சத்திற்கான சோதனை நிறைவுற்றதும் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.